உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகை மீட்பு முகாம்: கலெக்டர்

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 21) உரிமை கோரப்படாத வங்கி வைப்புத்தொகை, காப்பீட்டுத்தொகை, பங்குத்தொகை மீட்பு முகாம் நடைபெற உள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, டிசம்பர் 31 வரை அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் இந்த முகாம் நடக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகளில் உள்ள தொகைகள் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்படும். பொதுமக்கள் தங்கள் வங்கிகள் அல்லது ரிசர்வ் வங்கி இணையதளத்தில் விவரங்களை அறிந்து, உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன் பெறலாம். வங்கி, காப்பீட்டு, நிதித்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்குவார்கள்.

தொடர்புடைய செய்தி