காசிமேட்டில் ரகளையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த கரண்குமார் (29), தருண்குமார் (21), ஆறுமுகம் (25) ஆகியோர் நேற்று முன்தினம் சாலையில் ரகளையில் ஈடுபட்டனர். கரண்குமார் மீது கஞ்சா உட்பட ஏழு வழக்குகளும், தருண்குமார் மீது மூன்று குற்ற வழக்குகளும் உள்ளன. நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி