வெப்பத்தை தணிக்க வரும் மழை.! 9 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்

வெப்ப சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி