சென்னை: நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் புகை

சென்னையில், வெளிமாநிலத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு வந்த சரக்கு ரயில் திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, ஒரு ரயில் பெட்டியில் இருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து புகையைக் கட்டுப்படுத்தினர். அதிக வெப்பம் காரணமாக நிலக்கரி சூடாகி புகை வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி