உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை: தலைமறைவு ரவுடி கைது

கொடுங்கையூர் போலீஸார் கடந்த மாதம் 29-ம் தேதி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் உடல்வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. அவரை கைது செய்தபோது, அவரது கூட்டாளியான ரவுடி மணிகண்டன் தலைமறைவாகிவிட்டான். தனிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, ஏற்கெனவே 18 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மணிகண்டனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி