மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பிரேம்குமார் (44) என்பவர், சென்னை காவல் ஆணையரின் வெளியேற்ற ஆணை உத்தரவை மீறி சென்னை காவல் எல்லைக்குள் நுழைந்ததால் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவின்படி, அவர் வரும் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டார்.