மணலி சாலையில் மறியல்: வாக்குவாதம்

திருவொற்றியூர் அருகே மணலி விரைவு சாலையில் அதிகளவில் கண்டெய்னர் லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் சிக்னல் அமைக்க வேண்டும், எர்ணாவூர் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும், சாலையோரம் ஆக்கிரமித்துள்ள கண்டெய்னர் லாரிகளை அப்புறப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இன்று காலை பைக்கில் சென்ற 2 பேர் மீது மாநகர பஸ் மோதி காயம் அடைந்த நிலையில், கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி