வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மொத்தம் 1020 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2வது நிலையின் 1வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் 600 மெகாவாட், 1வது நிலையின் 2வது அலகில் ஆண்டு பராமரிப்புப் பணிகளால் 210 மெகாவாட், மற்றும் 1வது நிலையின் 3வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.