சென்னை துறைமுக கழகத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சச்சின் சரத்சந்திரா குர்வி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் 2003 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில ஐ.ஏ.எஸ் பேட்ச் பிரிவைச் சேர்ந்தவர். ஏற்கெனவே இந்தப் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சுனில் பாலிவால், தற்போது இந்திய அரசின் நீர்வழி கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.