குறைதீர் முகாமில் கமிஷனரிடம் மனு அளித்த மக்கள்

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் பொதுமக்களிடம் இருந்து 30 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்கவும் அறிவுறுத்தினார். இந்த முகாமில் துணை கமிஷனர் சுப்புலட்சுமி உடனிருந்தார்.

தொடர்புடைய செய்தி