வியாசர்பாடியை சேர்ந்த சிவரஞ்சனி, தனது மகன் கிருஷ்ணனை (6) கடந்த 2ம் தேதி இரவு விளையாட்டுத்தனமாக கழுத்தில் துப்பட்டாவால் இறுக்கியதில் அவன் உயிரிழந்தான். மகன்கள் இருவரும் சண்டையிட்டபோது, தாய் சிவரஞ்சனி கிருஷ்ணனின் கழுத்தில் துப்பட்டாவை போட்டு விளையாட்டாக இறுக்கியுள்ளார். இதனால் கிருஷ்ணன் மயங்கி விழுந்தான். அவனை உறங்க வைத்துவிட்டதாக நினைத்து படுக்கையில் படுக்க வைத்துவிட்டார். காலையில் அவன் உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் சிவரஞ்சனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.