நவம்பர் மாதத்தில் மெட்ரோ ரயிலில் பயணிகளின் வருகை குறைவு

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் 92 லட்சத்து 86 ஆயிரத்து 753 பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த மாதங்களுடன் ஒப்பிடும்போது சரிவாகும். அதிகபட்சமாக நவம்பர் 10-ந்தேதி 3 லட்சத்து 60 ஆயிரத்து 342 பேர் மெட்ரோ சேவையை பயன்படுத்தியுள்ளனர். பயண அட்டையை 60 ஆயிரத்து 317 பேரும், கியூ-ஆர் குறியீடு பயணச்சீட்டை 43 லட்சத்து 77 ஆயிரத்து 951 பேரும், சிங்கார சென்னை அட்டையை 48 லட்சத்து 48 ஆயிரத்து 485 பேரும் பயன்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி