பராமரிப்பு பணிகள்: மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை ரயில்வே கோட்டம் காட்டாங்கொளத்தூர் பணிமனையில் சனிக்கிழமை (மே 23) தண்டவாளம் மற்றும் தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பகல் 11. 40, 12. 28, 12. 40, மற்றும் பிற்பகல் 1. 56 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்குச் செல்ல வேண்டிய 'இமு' ரயில்கள், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். மறுமார்க்கத்தில், நண்பகல் 12 மணி, பிற்பகல் 1. 10, 1. 45, மற்றும் 2. 20 மணிக்கு செங்கல்பட்டிலிருந்து புறப்பட வேண்டிய ரயில்கள், தாம்பரத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.

தொடர்புடைய செய்தி