எருக்கஞ்சேரி அண்ணா சாலை 1வது தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (40) என்பவர், போதையில் அடிக்கடி மனைவி காயத்ரியுடன் (32) தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த கத்தியால் காயத்ரியை வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த காயத்ரி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் மணிகண்டனை நேற்று (மே 17) கைது செய்தனர்.