டீக்கடையில் குட்கா விற்பனை.. போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை திருவொற்றியூர் பகுதியில் குட்கா, கூல் லீப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவல்படி, திருவொற்றியூர் போலீசார் பேசின்பிரிட்ஜ் சாலையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு டீக்கடையில் போதை பொருட்கள் விற்பனை செய்தனர். இதையடுத்து டீக்கடை ஊழியர் சக்கரவர்த்தியை (27) போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி, அதே பகுதியில் உள்ள குடோனில் பதுக்கிவைத்திருந்த ரூ. 8 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதன்பின்னர் சக்கரவர்த்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி