சென்னை புழல் சிறையில் கொள்ளை வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி புனிதன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 7 நாட்களுக்கு முன்பு தாம்பரம் சங்கர்நகர் போலீசார் புனிதனை அழைத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியானது. இந்நிலையில், இறந்த புனிதனின் உடலில் காயங்கள் இருப்பதால், போலீசார் அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்.