சென்னையில் வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு

சென்னையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை 46 ரூபாய் உயர்ந்து 3,283 ரூபாயாக அதிகரித்துள்ளது. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்வால் சிரமப்பட்டு வரும் ஓட்டல் உரிமையாளர்கள், தற்போதைய விலை உயர்வால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி