சென்னை: பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 2 நாட்கள் அவகாசம்

தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து தவெக தலைவர் விஜய் உரிமைக் கோரியபோது, பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 2 நாட்கள் அவகாசம் வழங்கி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தவெக 108, காங்கிரஸின் 5 ஆதரவு உறுப்பினர்கள் என விஜய் பக்கம் 113 பேர் உள்ளனர். எனவே நாளை விஜய் முதல்வராக பதவியேற்ற பின் மே.9-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி