சென்னையில் மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து சேவைகளுக்கு டிக்கெட் எடுப்பதை எளிதாக்க உருவாக்கப்பட்ட 'சென்னை ஒன்' செயலியில், புறநகர் மின்சார ரயில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட், ரிட்டர்ன் டிக்கெட், ஏசி ரயில் டிக்கெட், பிளாட்பாரம் டிக்கெட், புறநகர் அல்லாத மின்சார ரயில்களில் முதல் வகுப்பு டிக்கெட் போன்ற சேவைகளை இணைக்க கும்டா நிர்வாகம் தெற்கு ரயில்வேக்கு கடிதம் எழுதியது. இதற்கு தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதாக கும்டா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயலி செப். 22ல் அறிமுகப்படுத்தப்பட்டு, 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.