சென்னை: பைக் ரேஸின் போது பயங்கர விபத்து - இருவர் பலி

சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் பாலத்தில் நள்ளிரவில் நடந்த பைக் ரேஸில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் சுஹைல் மற்றும் எதிரே ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டி குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு ரேஸர் சோயல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரேஸைத் தடுக்க வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி இந்த அதிவேக பைக் ரேஸ் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி