சென்னை: போன் நம்பர் கேட்டு கல்லூரி மாணவி மீது தாக்குதல்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சாலையில் நடந்து சென்றபோது ஆட்டோவில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் செல்போன் நம்பரை கேட்டுள்ளனர். மாணவி தர மறுத்ததால், ஆட்டோவில் இருந்து இறங்கி அவரை சரமாரியாக தாக்கிவிட்டு கும்பல் தப்பிச் சென்றது. இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் சந்தோஷ் என்பவரை கைது செய்து, அவருடன் இருந்த மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி