சென்னை: திருமாவுக்கு எதிரான வழக்கு ரத்து: நீதிமன்றம் அதிரடி

வி. சி. க. தலைவர் திருமாவளவனுக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. வெறுப்பு பேச்சு பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுஸ்மிருதி புத்தகத்தில் இருந்ததையே பேசினேன்; உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 2020-ல் நடந்த சர்வதேச கருத்தரங்கில் வெறுப்பு பேச்சு பேசியதாக மதுரையைச் சேர்ந்த வேதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி, வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி