இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட நபர் தலைமறைவாக உள்ளதாகவும், அவரின் வழிகாட்டுதலின் பேரில் ஹரி பிரசாத்தின் பையை மிரட்டி பறித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என நினைத்து வழிப்பறியில் ஈடுபட்ட நிலையில் அந்த பையில் பணம் இல்லை என்பதால் அதிருப்தி ஏற்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கைது நடவடிக்கையின் போது கீழே விழுந்ததால் குற்றவாளிகள் இருவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள முக்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்