கூடுதல் வாகன நிறுத்தம்: தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வேயின் சென்னை பிரிவு, 2025-26 நிதியாண்டில் பயணிகளின் வசதிக்காக 20 புதிய வாகன நிறுத்துமிடங்களைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், சென்னை பிரிவில் உள்ள மொத்த வாகன நிறுத்துமிடங்களின் எண்ணிக்கை 106லிருந்து 126ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் 820.32 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள பலதள வாகன நிறுத்துமிடம் இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாகும். அதிக பயணிகள் வந்து செல்லும் இந்த முக்கிய சந்திப்பில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி