செம்பியன் போலீசாருக்கு பெரம்பூர், முரசொலி மாறன் பாலம் அருகே மதுபோதையில் ஒரு வாலிபர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த லோகநாதன்(23) என்பவரை கைது செய்தனர். அவர் மதுபோதையில் மக்களை மிரட்டி அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், லோகநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.