அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயன்படுத்தலாம்

தெற்கு ரயில்வே அனைத்து சேவைகளுக்கும் ரயில் ஒன் செயலியை பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது. இந்த செயலி மூலம் பயணிகள் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், சீசன் டிக்கெட், நடைமேடை டிக்கெட்டுகளை பெறலாம். மேலும், பி. என். ஆர். நிலை அறிதல், டிக்கெட் ரத்து போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. மார்ச் 1ம் தேதி முதல் யூ. டி. எஸ். செயலி பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும்.

தொடர்புடைய செய்தி