இதையடுத்து, அந்த பணம் மற்றும் நகைகளை ஒரு டப்பாவில் போட்டு மந்திரம் செய்து, நான் சொல்லும் போது தான் டப்பாவை திறந்து பார்க்க வேண்டும் என கூறி, டப்பாவை அக்பரிடம் அவர் கொடுத்துள்ளார். பின்னர், ஓரிரு நாள் கழித்து, சந்தேகத்தின் பேரில் அக்பர் அந்த டப்பாவை திறந்து பார்த்தார். அப்போது அதில் பணம், நகை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், இதுகுறித்து திருமங்கலம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் ஈடுபட்டது, செங்குன்றம் நேதாஜி நகரை சேர்ந்த விஜயலட்சுமி (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 25,000 பணம், 1. 51.5 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
பெரம்பூர்
சென்னையில் மாணவி காரில் கடத்தி பலாத்காரம்