சென்னை: தோழியிடம் தாலி செயின் பறித்த பெண் கைது

சென்னையில், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் தங்கம்மாள், கடந்த 15ம் தேதி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். சக செவிலியர் நான்சி நிஷாவுடன் ஆட்டோவில் வீடு திரும்பியபோது, தங்கம்மாள் அணிந்திருந்த 5 சவரன் தாலி செயின் மாயமானது. முதலில் ஆட்டோ ஓட்டுநரை சந்தேகித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், சக செவிலியர் நான்சி நிஷாவே தங்கம்மாள் மயங்கிய நிலையில் தூங்கியபோது நகையை திருடியது தெரியவந்தது. நான்சி நிஷா கைது செய்யப்பட்டு, நகையும் மீட்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி