சென்னை: தலைமை செயலகம் முன்பு பட்டா கத்தியுடன் வீடியோ: இருவர் கைது

சென்னை தலைமைச் செயலக சாலையில் இடுப்பில் கத்தியுடன் பைக்கில் சென்ற இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பணம் பறித்த வழக்கில் கெளதம், அபினேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். கெளதம் மீது 3 போதைப் பொருள் வழக்குகள் உள்ளன. அபினேஷ் பிரபல தாதா ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான மாதவனின் மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி