கொடுங்கையூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுபோதையில் இருந்த 9 நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், இரும்பு ராடால் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 கார்கள் மற்றும் 4 ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வீரமணி, ஜெயபிரகாஷ், பிரசாந்த், கோகுலகிருஷ்ணன், ஜெகன் ஆகிய 5 பேரை நேற்று மாலை கைது செய்தனர்.