சென்னை: ஆட்டோ மீது வேன் மோதல்..சிறுவன் பலி

எழும்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜெயராமனின் உறவினர் மகன் பிரனீஷ் (16), நேற்று முன்தினம் ஆட்டோவில் குன்றத்தூர் சென்றபோது, பூந்தமல்லி ஈகா தியேட்டர் சிக்னலில் நின்றபோது பின்னால் வந்த வேன் மோதி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று மாலை உயிரிழந்தான். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி