சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கு சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை குறித்து மக்கள், மாணவர்கள் என அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கீழ்பாக்கம் பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விதி மீறல்களுக்கு சலான் வழங்கும் முறையை காட்சிப்படுத்தினர்.