மணலி புதூர் அருகே அடுத்தடுத்து கொலை: போலீசார் விசாரணை

சென்னை மணலி புதுநகர் அருகே அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. முதலில் ரவுடி பிரசாந்த் மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி நீங்குவதற்குள், விச்சூர் கிராமத்தில் இளைஞர் விஜய் (21) ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி