துரைப்பாக்கம்: ஆன்லைன் காதல் வலையில் சிக்கி 4 சவரன் நகை திருட்டு

துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜிவ்(46) என்பவர், 'கிரிண்டர்' செயலி மூலம் ஜெசிகா என்ற பெண்ணுடன் பழகியுள்ளார். ஜெசிகா கனடாவிலிருந்து சென்னை வந்துள்ளதாகக் கூறி, ராஜிவ்வை எழும்பூரில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துள்ளார். ராஜிவ்வும் அங்கு சென்றபோது ஜெசிகாவுடன் அவரது தோழியும் இருந்துள்ளார். பின் மூவரும் மது அருந்தியுள்ளனர். போதையில் மயங்கிய ராஜிவ் கண் விழித்தபோது, கழுத்தில் இருந்த 4 சவரன் தங்கச் செயின் திருடு போனதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி