இந்த ரயில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டரல் ரயில் நிலையத்திலிருந்து கோவா வாஸ்கோடகாமா ரயில் நிலையம் வரை வாரத்தில் ஒரு நாள் இயக்கப்பட்டு வந்தது. கோவா செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கலாம். ஆனால் பயண கட்டணம் உள்ளிட்ட காரணங்களுக்காக நடுத்தர மக்களால் செல்ல முடியாத சூழல் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கோவாவிற்கு இயக்கப்பட்டு வந்த ரயில் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தெற்கு ரயில்வேயிற்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை: இந்த நிலையில் இந்த ரயிலுக்கு பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில் கொரோனா சமயத்தில் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு ரயில் சேவை துவங்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் ரயில் சேவையை தொடங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி