தி.நகரில் பழைய நகைகளை வாங்கி விற்கும் கடை வைத்துள்ள சிம்சன் (53) அலுவலகத்தை தொடர்பு கொண்டார் காசி. தனது நகைகளை, 3.73 லட்சம் ரூபாய் அடகு வைத்திருப்பதாகவும் அதன் வட்டித்தொகையுடன் சேர்த்து, 4.90 லட்சம் ரூபாய் என்றும் கூறியுள்ளார். நகைகளை மீட்டு உங்கள் நிறுவனத்தில் விற்கிறேன் எனக்கூறி சிம்சனிடம் 5 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு போன் வருவதுபோல், கவனத்தை திசை திருப்பி, 5 லட்ச ரூபாயுடன் பைக்கில் தப்பி சென்றார் காசி. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.