பெரம்பூரில் புதிய அஞ்சல் துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்கம்

அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் பெரம்பூரில் புதிய அஞ்சல் துறை பாஸ்போர்ட் சேவை மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் நிருபர்களை அவர் சந்தித்து பேசியதாவது: ஜூலை 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடக்கிறது. வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பூரில் விரைவில் அரசு-தனியார் கூட்டு முயற்சியில் புதிய அஞ்சல்துறை பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி