ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் தள்ளிவைத்தது. இந்நிலையில், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், "முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் கூடுதல் நகரங்களில் வரும் ஆக. 3ம் தேதி காலை 9 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு நகரத்தை https://www.natboard.edu.in/ என்ற இணையதளத்தில் வரும் 13ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 17ம் தேதி நள்ளிரவு 11.55 மணிக்குள் மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். முதலில் தேர்வு நகரங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். செப். 3ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி புகைப்படங்களை பரப்ப வேண்டாம்: நடிகை தமன்னா வேண்டுகோள்