சென்னையைச் சேர்ந்த புஷ்பராஜ் உள்ளிட்ட 8 பேர் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், போலி இரண்டாயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள், ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு நிறுவனங்களின் போலி சான்றிதழ்கள், போலி ஆவணங்கள், மடிக்கணினி, கைப்பேசிகள், ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.