தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, டெல்லியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து நேற்று (செப்.,24) சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இவர் மீது 4 கொலை வழக்கு உட்பட 16 வழக்குகள் உள்ளன. புதூர் அப்புவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் கிடைத்துள்ளன.
வழக்கு ஒன்றில் சிறையில் இருந்தபோது, புதூர் அப்புவுடன், சம்பவ செந்திலின் கூட்டாளிகள் இருந்துள்ளனர். இதன்மூலம் சம்பவ செந்திலின் தொடர்பு கிடைத்துள்ளது. சம்பவ செந்தில் கூறியதன்பேரில், சிலமுறை புதூர் அப்பு வெடிகுண்டுகள் தயார் செய்து கொடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கு முன்பு, சம்பவ செந்தில் வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுக்கும்படி புதூர் அப்புவுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
இதன்படி, புதூர் அப்பு, வெடிகுண்டுகள் தயார் செய்துகொடுத்துள்ளார். முதலில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் தரமற்று இருந்ததால் 2வது முறையாக வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த வெடிகுண்டுகளை கோடம்பாக்கத்தில் உள்ள ராஜேஷ் என்பவரின் குடோனில் வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.