இந்த திட்டம் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை உறுதி செய்யும் வகையில், முதல்வர் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் உடனே அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கிணங்க, அரசு உத்தரவை நிறைவேற்றும் வகையில் சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 19 பெண் காவலர்கள் அவர்களின் விருப்பப்படி சென்னை பெருநகர காவல் துறையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் ஆணையை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் செயல்படுத்தி அதற்கான உத்தரவும் பிறப்பித்துள்ளார்
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ