புளியந்தோப்பு ஆட்டு தொட்டிக்கு ஆடுகள் விற்பனைக்கு வருகை

வரும் 28ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, புளியந்தோப்பு ஆட்டு தொட்டியில் ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளன. பண்டிகை நெருங்குவதால், ஆடுகளை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். ஆடுகளின் எடை மற்றும் தரத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக, பக்ரீத் குர்பானிக்காக பிரத்யேகமாக வளர்க்கப்படும் பெரிய 'கடா' ஆடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையாகின்றன. ஆட்டு விற்பனை வழக்கம்போல் மிக அமோகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி