வில்லிவாக்கம்: தொட்டில் புடவை இறுக்கி சிறுமி பலி

வில்லிவாக்கம் ரங்கதாஸ் தெருவில் வசிக்கும் சரவணனின் மகள் தாமரை (11), அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், வேலை முடித்து வீடு திரும்பிய சரவணன் கதவைத் தட்டியபோது, தாமரை புடவையால் கட்டப்பட்ட தொட்டிலில் சுயநினைவின்றி தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி