வேளச்சேரி: மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. இருவர் கைது

சென்னை வேளச்சேரி பகுதியில் 61 வயது மூதாட்டி ஒருவர், பைக் டாக்ஸி மூலம் பிரியாணி கடைக்கு வந்துள்ளார். அங்கிருந்து டீக்கடைக்கு நடந்து சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் அவரை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வேளச்சேரி போலீசார் விசாரணை நடத்தி, இருவரை கைது செய்துள்ளனர். மேலும் மூன்று பேரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி