அதில், "சென்னை ஆழ்வார்பேட்டையில் இந்தோ - ரஷ்யன் அசோசியேட் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருபவர் அருண்ராஜ் (38). இவர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஆலிவ் பீச்சில் வசிக்கிறார். இவர் இந்தோ-ரஷ்யன் தொழில் கூட்டமைப்பின் பிரதிநிதி என்று கூறி என்னிடம் அறிமுகமானார்.
மேலும், ரஷ்ய அரசு இந்திய திட்டங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்ய முன் வந்துள்ளது. திருச்சியில் நான் நடத்தி வரும் வியாபார திட்டத்துக்கு ரூ. 2 ஆயிரம் கோடி வரை முதலீடு பெற்றுத் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதற்கு அவர் கமிஷனாக என்னிடமிருந்து ரூ. 7 கோடியே 32 லட்சத்து 45,000 பெற்றுக் கொண்டார்.
மேலும், எனது நிறுவனத்தில் ரஷ்ய நிறுவனம் முதலீடு செய்துள்ளதாக போலியான ரஷ்ய அரசின் லோகோ, கொடிகள் மற்றும் தகவல்களை காண்பித்தார். அவை போலி என்பது பின்னர்தான் தெரிய ஆரம்பித்தது. அருண்ராஜையும், அவரது கூட்டாளிகளையும் தொடர்பு கொண்டபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.
எனவே, என்னிடம் மோசடி செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்து இருந்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடிக்கு மூளையாக செயல்பட்டதாக அருண்ராஜ் மற்றும் அவரது கூட்டாளி ரூபாள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.