சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதனால், சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று (மே 25) திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது வரை சென்னை முழுவதும் கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.