சென்னை ரயில் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் பல மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடற்கரை - திருவள்ளூர், சென்ட்ரல் - திருவள்ளூர், சென்ட்ரல் - திருத்தணி, சென்ட்ரல் - கடம்பத்துார், திருவள்ளூர் - சென்ட்ரல், அரக்கோணம் - சென்ட்ரல், திருநின்றவூர் - சென்ட்ரல் ஆகிய தடத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக 30 சிறப்பு மின்சார ரயில்களும் இயக்கப்பட உள்ளன.