சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த கமிஷனர் அருண், 19 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.