விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் செய்த சிறந்த முன்னெடுப்புகள், ஆராய்ச்சிகள் உள்ளிட்ட விவரங்களை தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரி முதல்வர்கள், இயக்குநர்கள், துணை வேந்தர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாது. இதுதவிர விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முழு நேர ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கல்வியாளர்கள் உள்பட 5 பேர் கொண்ட குழு விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்யும். இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50,000 வழங்கப்படும். இதை டெல்லியில் செப்டம்பர் 5ம் தேதி ஜனாதிபதி அளித்து கவுரவிப்பார். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-29581120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.ugc.gov.in எனும் வலைத்தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
நேபாளத்தில் பலமடங்கு உயர்த்தப்பட்ட விமான கட்டணம்