தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தபோது, இந்த சிறுவர்களை பிஹாரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்து, இங்குள்ள கடைகள், கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்த இருந்தது தெரியவந்தது. மேலும், சென்னையில் கட்டிடத் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக, பிஹார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து சிறுவர்களை அழைத்து வருகின்றனர். இதற்காக அவர்களின் பெற்றோரிடம் சிறிய தொகை கொடுக்கின்றனர்.
ஆனால், முதலாளிகளிடம் பெரிய தொகை பெற்றுவிடுகின்றனர். அதன் பின் சிறுவர்களை கொத்தடிமைகளாக பயன்படுத்துவதும் விசாரணையில் தெரியவந்தது. பிஹாரைச் சேர்ந்த சுரேந்தர் ராவத், அஜய்குமார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சைலேஷ் ராஜ்பார் ஆகிய மூவரை கைது செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 9 சிறுவர்களை ராயபுரத்தில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.